திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் மகாலட்சுமி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் தேவேந்திரன்; இவரது மகன் சுபாஷ்.
சுபாஷ், நேற்று இரவு (மே.14) சாப்பிட்டு விட்டு செல்போன் பேசிக்கொண்டே வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், அவர் நண்பர்கள் வீட்டிற்து சென்றிருப்பார் என நினைத்து சுபாஷைத் தேடவில்லை. இதையடுத்து, மறுநாள் காலை மகாலட்சுமி நகரில் உள்ள அஞ்சுகம் சாலை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அக்கம்பக்கதினர் அருகில் பார்த்தபோது இறந்து கிடந்தது சுபாஷ் என்று தெரியவந்தது.
உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சுபாஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சசிகலா பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: காவல் ஆணையரிடம் புகார்!