கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தூய்மைப் பணியாளர்கள் தினமும் தெருக்களை தூய்மை செய்து வருகின்றனர்.
இதனை போற்றும் விதமாக திருவண்ணாமலை நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனை முன்பு எம்.ஆர் பேட்மிட்டன் பிரஸ் கிளப் சார்பில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 110 பேருக்கு இன்று காலை உணவு வழங்கபட்டது.
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!