ETV Bharat / state

6 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்! - suicide in tiruvannamalai

திருவண்ணாமலை: இறந்த மாமனார், மாமியார் அசரீரி குரலில் அழைத்ததாகக் கூறி, தான் பெற்ற குழந்தையை கழுத்தறுத்துக்கொலை செய்த தாய், அதன்பின் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சிறுபாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother murdered his own daughter  திருவண்ணாமலை கழுத்தறுத்துக் கொலை  suicide in tiruvannamalai  mother killed daughter
6 வயது மகளை கழுத்தறுத்து கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்
author img

By

Published : Aug 3, 2020, 4:25 PM IST

திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் விவசாயம் செய்துவருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும்; நிவேதா என்ற 6 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று(ஆகஸ்ட் 2) ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இறைச்சி எடுத்து சமைக்கக் கூறிவிட்டு, தோட்டத்திற்குச் சென்றுள்ளார், கலையரசன்.

வாழை இலை அறுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய கலையரசன், வீட்டின் பின்புறம் இருந்த கழிவறையில் மனைவி, மகள் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்த போது, கழுத்தறுபட்டு உயிரிழந்த நிலையில், நிவேதா இருந்துள்ளார்.

உயிருக்குப்போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்த மனைவி சுகன்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். இதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக சுகன்யா சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தண்டராம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, காவல் துறையினரிடம் சுகன்யா அளித்த வாக்குமூலத்தில், 'உயிரிழந்த மாமனார், மாமியார் தங்களிடம் வந்து விடுங்கள்' என அசரீரி குரலில் கூறியதால், தனது குழந்தையைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.