கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்து திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கு சென்றடையும். இதனால் நாட்டில் வேற்றுமை ஒளிந்திருக்கிறது என கூறினார்.
மேலும் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, நவீன இரும்பு மனிதர் என்றும் அவருக்கு இணையான இரும்பு மனிதராக அமித் ஷா திகழ்ந்து வருகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.