திருவண்ணாமலை நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாக்கம் சாலையில் செயல்பட்டு வரும் பெண் குழந்தைகள் இல்லம், தனியார் காப்பகம் உள்ளிட்ட நான்கு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு குழந்தைகள், முதியவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களான கையுறை, கிருமி நாசினி, முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளதா?, தகுந்த இடைவெளி பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். அதையடுத்து அவர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பாய், தலையணை, போர்வை, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.
இதையும் படிங்க: வீடுதோறும் சென்று ஆய்வு மேற்கொண்ட சிறப்பு அலுவலர்