திருவண்ணாமலை நகரில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் நீர்தேக்க தொட்டிகள், சுத்திகரிப்பு மையங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்கவும் நீர்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கவும் அவர் நகராட்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தற்போது திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பகுதிகளில் வசிக்கும் 30,466 குடும்பங்களுக்கு 19,339 குடிநீர் இணைப்பு நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘முதலமைச்சரைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பேசும் ஸ்டாலின்’ - அமைச்சர் காட்டம்