திருவண்ணாமலை: பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜூலை 5ஆம் தேதி அமைச்சர்கள் எ.வ வேலு , மா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செங்கம் பகுதியில் வசித்து வரும் 'Soul Free' தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரீத்தி சீனிவாசன், அந்த வளாகத்தின் ஒரு பகுதியில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுத்த தேவையான பல்வேறு அரசு சான்றிதழ்கள் வழங்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார்.
தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு . க . ஸ்டாலினை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார். இதனையடுத்து அவர் அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக இன்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, பிரீத்தி சீனிவாசனின் வீட்டிற்கே சென்று திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுவற்கு தேவையான வருவாய்த் துறையின் கட்டட உரிமம் சான்றிதழ் , பொதுப் பணித் துறையின் கட்டட நிலைத்தன்மை சான்றிதழ் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சுகாதார சான்றிதழ் , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தடையின்மை சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களை வழங்கினார் .
அப்போது , சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி , மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் , நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க :நா. முத்துக்குமார் - யாரும் பார்க்காத தருணங்களை வேடிக்கை பார்த்தவன்