திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதிகளில் ஏராளமான தரைக்காடுகள் உள்ளன. இந்த காட்டில் மான், முயல், காட்டெருமை போன்ற விலங்கினங்கள் அதிகளவு காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை வனவிலங்குகளை வேட்டையாட மூன்று பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் சுற்றித் திரிவதாக புதுப்பாளையம் வனசரகர் சுரேஷ்க்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து மாரியம்மன் கோயில் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் இல்லாத நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பிடிப்பட்டவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் அனுமதியின்றி சுற்றுலா சென்ற பயணிகள் - அபராதம் விதித்த வனத்துறையினர்!