உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உலக நன்மைக்காக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு மஹா யாகம் நடத்தினர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பல்வேறு விழாக்கள், சிறப்பு யாகங்கள் நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று கோயிலில் அமைந்துள்ள பிரம்மதீர்த்த குளக்கரையிலுள்ள நான்கு கால் மண்டபத்தில் உலக நன்மைக்காக சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 108 மூலிகை பொருள்களைக் கொண்டு சிறப்பு யாகம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லை: ஈஷா மையம் விளக்கம்