திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்களால் கரோனா வைரஸ் நோய்தொற்று நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலும் வருபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதைதொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி எல்லையை பலப்படுத்தவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார்.
இன்று (ஜூன் 19) திருவண்ணாமலை மாவட்ட எல்லையான நெடுங்காம்பூண்டி கூட்ரோடு அருகே எல்லையை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நெடுங்காம்பூண்டி கிராம வழியாக வரும் சிறிய சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டதை பார்வையிட்டார்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் உள்ள 27 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட எல்லைகள் அனைத்திலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து எல்லைகளைத் தாண்டி வருபவர்களை தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகரில் நாளுக்குநாள் கரோனா நோய்த்தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
எனவே திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் சிறிய சாலைகளுக்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தவர்களால் நோய்த்தொற்று 879 ஆக அதிகரித்துள்ளது.
முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அனுமதியின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தங்கள் சொந்த ஊருக்கு வந்தால், அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாக கருதி வழக்குப்பதிவு செய்து மாவட்டத்திற்கு வெளியே அழைத்துச் சென்று விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதியின்றி சொந்த ஊருக்கு வந்தால் வழக்குப் பதிவு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை: அனுமதியின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தங்கள் சொந்த ஊருக்கு வந்தால், அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாக கருதி வழக்குப்பதிவு என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.