திருவண்ணாமலை : கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கத்தில் ஏழாவது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தில், குபேரர் சிவபெருமானை பூஜித்து கார்த்திகை மாதம்,தேய்பிரையன்று, அமாவசைக்கு முன்தினம் குபேரர் கிரிவலம் வருவதாக ஐய்தீகம்.
இதனையொட்டி நேற்றைய தினத்தில் குபேரரை வழிபட்டு கிரிவலம் வர லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள குபேர லிங்கத்தில் கிரிவம் வர குவிந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், தேய்பிறை, சிவராத்திரியில், அதாவது அமாவசைக்கு முன்தினம் அன்று சிவபொருமானை பூஜிக்க வேண்டும் என்று குபேரர் விரும்பியதால், குபேரர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்தை பூஜீத்து,குபேரர் கிரிவலம் மேற்கொள்வதாக ஐதீகம்.
குறிப்பாக நேற்றைய கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்தியன்று குபேரர் சிவபெருமானை வழிப்பட்டு மாலை 6 மணி முதல் 7 மணி வரை கிரிவலம் வருவதாகவும், அந்த தினத்தில் பக்தர்கள் குபேர லிங்கத்தை வழிப்பட்டு அந்த நேரத்தில் கிரிவலம் மேற்கொண்டால் அனைத்து செல்வங்களும்,மற்றும் நினைத்தது கைகூடும் என்பதால் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்தில் தரிசனம் செய்ய குவிந்தனர்.
குபேரரை வழிபட்டு விட்டு பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் மேற்கொண்டனர். மேலும் அவர்கள் குபேர லிங்கத்தை வழிப்பட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தும் வகையிலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும் வெற்றிலையின் மீது தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதனையொட்டி குபேர லிங்கத்திற்க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.மேலும் குபேர கிரிவலத்தினையொட்டி குபேர யாகம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தலைப்பாகை அணியாத உதயநிதி - வலுக்கும் கண்டனம்