ETV Bharat / state

சாதி சான்றிதழ் வேண்டும்: காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் உண்ணாவிரதம்

author img

By

Published : Nov 7, 2019, 8:15 AM IST

திருவண்ணாமலை: ஆரணி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

kaatunayakar community protest to get community certificate for their children

ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் 300க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் தங்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மனு அளித்துவந்தனர்.

ஆனால், இதுநாள் வரை அரசு அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால், அவர்கள் மேற்படிப்பிற்கு செல்லமுடியாத சூழல் நிலவிவருகிறது. மேலும், அரசாங்கப் பணிகளுக்கும் செல்லமுடியாத நிலை உள்ளது.

இந்த சூழலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்தும், தங்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரியும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் உண்ணாவிரதப்போராட்டம்

எங்கள் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30கிலோ தங்கம் பறிமுதல்!

Intro:15 வருடங்களாக ஜாதி சான்று கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் வழங்கவில்லை எனக் கூறி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம்.Body:15 வருடங்களாக ஜாதி சான்று கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் ஜாதி சான்று வழங்கவில்லை எனக் கூறி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் ஜாதிச் சான்று கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 15 வருடங்களாக எஸ்டி ஜாதி சான்றிதழ் கோரி குடுகுடுப்பைக்காரர்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். எனினும் இதுவரை சாதிச்சான்று வழங்காததை கண்டிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ மாணவிகள் மேற்படிப்பிற்கு செல்வதற்கு ஜாதிச்சான்று கட்டாயம் தேவைப்படுவதாகவும், இல்லையென்றால் தங்களை வெளியேற்றி விடுவதாகவும் மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர். குடுகுடுப்பை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்படிப்பு முடித்தாலும் ஜாதிச் சான்று இல்லாத காரணத்தால் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என குடுகுடுப்பைக்காரர்கள் தெரிவித்தனர்.

Conclusion:15 வருடங்களாக ஜாதி சான்று கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் ஜாதி சான்று வழங்கவில்லை எனக் கூறி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.