ETV Bharat / state

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை - Tiruvannamalai Girivalam

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
author img

By

Published : Jul 21, 2021, 7:32 PM IST

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகத் திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்குப் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், கிரிவலம் நடைபெறும் நாள்களான வரும் 23, 24 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதற்குக் கட்டுப்பட்டு பக்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் விழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.