திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தேசூரில் வேளாண் விற்பனை மையம் சார்பில் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கிவருகிறது. இந்தக் கூடத்தில் விவசாயிகள் விளைவித்த நெல், மணிலா போன்ற விளைப்பொருள்களை விற்பனைக்கு எடுத்துவருவது வழக்கம்.
இதில் பல மாதங்களாக விவசாயிகளிடம் பெற்ற விளைப்பொருள்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யாமல் நிர்வாகம் விவசாயிகளை வஞ்சித்துவருவதாகக் கூறி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பல மாதங்களாக விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யாத நிர்வாகத்தைக் கண்டித்தும் தானியங்களைக் கொண்டு வரும் விவசாயிகளைக் கண்ணியமாக நடத்தக்கோரியும் விவசாயிகள் முழங்கினர். மேலும் உரத்திற்கான மானியத்தை குறைத்த மத்திய அரசைக் கண்டித்தும் ஒப்பந்த முறை விவசாய திட்டத்தைக் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் சங்கச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க...மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு இவ்வளவு விலையேற்றமா? கே.எஸ். அழகிரி கேள்வி