திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பௌர்ணமி நாளான இன்று 01.09.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.16 மணி முதல் 02.09.2020 புதன்கிழமை காலை 11.10 வரை கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் , பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மலையினைச் சுற்றி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து ஆறாவது மாதமாக பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனிமேல்தான் கரோனா ஆட்டம் அதிகரிக்கப்போகிறது