திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் கிராமம் பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர்(38). அவருக்கு உமா என்ற மனைவியும் நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அவர்களின் எதிர் வீட்டில் வசித்தவர் தேன்மொழி(43). அவருக்கு மூர்த்தி என்ற கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
கூலித்தொழில் செய்துவந்த சுதாகருக்கும் அவரது எதிர் வீட்டில் வசித்துவந்த தேன்மொழிக்கும் நீண்டகாலமாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கிடையே இருந்த உறவு குறித்து இருவீட்டாருக்கும் தெரியவந்ததால், அவர்கள் இருவரையும் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து அவமானம் தாங்கமுடியாமல் மனவேதனையுடன் இருந்த இருவரும், அவர்களின் வீடுகளுக்கருகே தனியார் நிலத்தில் இருந்த உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள், அவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் செல்போன் டவர் ஏறிய இளைஞரால் பரபரப்பு!