திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(67). இவரது மனைவி மல்லிகா (60), விவசாயம் செய்துவரும் ராஜமாணிக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில் நேற்று இரவு மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், மனைவியை விறகு கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த மல்லிகா சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இன்றுமுதல் கோரிக்கை மனுக்களை நேரில் அளிக்கலாம் - தி.மலை ஆட்சியர்