திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாசிலை அருகே இந்து மக்கள் கட்சி சர்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமர், உள்துறை அமைச்சரை ஊடகம், சமூக வலைதளங்களில், தவறாக விமர்சிப்போரை கண்டித்து நடைபெற்ற இந்த அர்பட்டத்தில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.