திருவண்ணாமலையில் நாச்சிபட்டு, அரசம்பட்டு, வாணியந்தாங்கள், வேங்கிக்கால், நொச்சிமலை, தேனிமலை, அடிஅண்ணாமலை, நல்லவன்பாளையம், ஏந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஆக.24) மாலை சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தற்போது பயிரிட்டுள்ள மானாவாரி மணிலா பயிர்கள் உயிரோட்டம் பெற்று, செழித்து வளர்ந்து நல்ல விளைச்சல் தருவதற்கான வாய்ப்பாக இந்த மழை அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.