ETV Bharat / state

இருதய நோயால் பாதிக்கப்பட்ட நெசவாளர்...! - நேசக்கரம் நீட்டிய தி.மலை ஆட்சியர் - அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்

திருவண்ணாமலை: இருதய நோயால் பாதிக்கப்பட்டு வறுமையின் காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்துவந்த நெசவாளருக்கு திருவண்ணாமலை ஆட்சியர் நேசக்கரம் நீட்டியுள்ளார்.

heart treatment collector hospital tiruvannamalai
author img

By

Published : Sep 22, 2019, 2:32 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் வசித்துவரும் நெசவாளர் வேல்முருகன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு குடும்ப வறுமையின் காரணமாக சிகிச்சைப் பெற முடியாமல் தவித்துவந்தார். இவரது மகன் கோகுல் தசைசிதைவு நோயினால் நடக்க முடியாமல் சிறுவயதிலிருந்து பெற்றோர்களின் கவனிப்பில் வளர்ந்துவருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வேல்முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வேலூர் நாராயணிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இருதய நோய், நீரிழிவு நோய், இடது வெண்ட்ரிக்கிள் செயலிழப்பு ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்கொண்டு வேல்முருகனுக்கு சிகிச்சை செய்வதற்கு கூடுதலாக 2.5 லட்சம் பணம் தேவைப்பட்டதால் மனைவி லதா என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மன வேதனையில் இருந்துவந்துள்ளார்.

heart treatment collector hospital tiruvannamalai
சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் வேல்முருகன்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் நிலை குறித்து எடுத்துரைத்து கண்ணீர் மல்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் லதாவிற்கு ஆறுதல் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அனுப்பிவைத்தார்.

collector hospital tiruvannamalai
மேல் சிகிச்சைக்காக வழியனுப்பிய மாவட்ட ஆட்சியர்

அதன்பின் வேல்முருகன், லதா ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் வரவழைக்கப்பட்டு வேல்முருகனை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு வழியனுப்பி-வைக்கப்பட்டார்.

Intro:இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நெசவாளர் வேல்முருகனின் மேல் சிகிச்சைக்கு சென்னையில் ஏற்பாடு செய்து மாவட்ட தலைவர் கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.
Body:இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நெசவாளர் வேல்முருகனின் மேல் சிகிச்சைக்கு சென்னையில் ஏற்பாடு செய்து மாவட்ட தலைவர் கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் வசித்து வரும் ஏழை நெசவாளர் வேல்முருகன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு குடும்ப வறுமையின் காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாக மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் வழியனுப்பி வைத்தார்.

களம்பூர் பேரூராட்சியில் வசித்துவரும் நெசவாளர் வேல்முருகன் வீட்டில் பட்டு நெசவு தொழில் செய்து மிக ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

மாதம் இரண்டு பட்டு சேலைகள் செய்து அதன் மூலம் கிடைக்கும் 7000 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

இவரது மகன் கோகுல் தசைசிதைவு நோயினால் நடக்க முடியாமல் சிறுவயதிலிருந்து பெற்றோர்களின் கவனிப்பில் வளர்ந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேல்முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வேலூர் நாராயணி புறத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு இருதய நோய், நீரிழிவு நோய், இடது வென்ட்ரிகிள் செயலிழப்பு ஆகிய நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

வேல்முருகனுக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு கூடுதலாக 2.5 லட்சம் பணம் தேவைப்பட்டதால் மனைவி லதா என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மகனுக்கு அரசு உதவிகள் பெறுவதற்கு லதா மாவட்ட ஆட்சியராக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து அரசு உதவிகளைப் பெற்று உள்ளார்.

இதனடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் நிலை குறித்து எடுத்துரைத்து கண்ணீர் மல்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் லதாவிற்கு ஆறுதல் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அனுப்பி வைத்தார்.

வேல்முருகன், லதா ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் வரவழைக்கப்பட்டு வேல்முருகனை சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் லதாவிடம் பத்தாயிரம் ரூபாய் செலவிற்கு வழங்கினார். மேலும் வேல்முருகன், லதா தம்பதியரின் மாற்றுத்திறனாளி மகன் கோகுல் அவரது தந்தைக்கு சென்னையில் ஒரு வாரம் சிகிச்சை நடைபெறும் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கோகுல் மாற்றுத்திறனாளிகள் பாதுகாக்கும் இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.Conclusion:இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நெசவாளர் வேல்முருகனின் மேல் சிகிச்சைக்கு சென்னையில் ஏற்பாடு செய்து மாவட்ட தலைவர் கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.