திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாகக் கீற்றுக் கொட்டகை அமைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட்டதிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் குடியுரிமை, வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களைச் செய்யாறு உதவி ஆட்சியர் அனாமிகாவிடம் அளிக்கச் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முகப்பு வாயிலிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அன்று மாலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் விடுவித்தும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்நிலையில், அனுமதி இன்றி ஒன்று கூடி ஊர்வலமாகச் செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கடந்த 4ஆம் தேதி விடியற்காலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் (வயது 45) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை பேரில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அருள் (45), தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் தேவன்(45), மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நந்திகேசவன் என்பவரின் மகன் சோழன்(32), மேல்மா கிராமத்தைச் சேர்ந்த மோகனம் என்பவரின் மகன் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பையன் என்பவரின் மகன் மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாக்யராஜ் (38) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
— K.Annamalai (@annamalai_k) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில்… pic.twitter.com/icl52G1nPg
">தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
— K.Annamalai (@annamalai_k) November 16, 2023
தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில்… pic.twitter.com/icl52G1nPgதமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
— K.Annamalai (@annamalai_k) November 16, 2023
தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில்… pic.twitter.com/icl52G1nPg
இந்த நிலையில், தமிழக பாஐக தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில், "தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர். திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளைப் பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழ்நாடு பா.ஐ.க வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சத்துணவில் அழுகிய முட்டை விவகாரம்.. அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிராக தேசிய அளவில் விமர்சனம்!