ETV Bharat / state

ஜூடோவில் அரசுப் பள்ளி மாணவன் சாதனை! - முதன்மைக்கல்வி அலுவலர்

திருவண்ணாமலை: தேசிய அளவில் ஜூடோ போட்டியில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர், திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று வாழ்த்து பெற்றார்.

அமர்நாத்
author img

By

Published : Jun 7, 2019, 8:33 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு செல்லும் மாணவன் அமர்நாத், ஏப்ரல் மாதம் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது 'யூத் ரூரல் கேம்ஸ் 2019' ஜூடோ போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

இதே போன்று பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது தேசிய யூத் ரூரல் கேம்ஸ் 2019 ஜூடோ போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவிலான ஜூடோ போட்டிக்கு தகுதிபெற்றார். இந்நிலையில் சர்வதேச அளவில் தகுதி பெற்றதற்காக திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று வாழ்த்து பெற்றார்.

Intro:ஆறாவது தேசிய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவன்.

Body:ஆறாவது தேசிய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவன்.

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்து இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு செல்லும் அமர்நாத் என்ற மாணவன் ஏப்ரல் 2019 மாதம் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது யூத் ரூரல் கேம்ஸ் 2019 ஜூடோ போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 1 6 2019 அன்று பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது தேசிய யூத் ரூரல் கேம்ஸ் 2019 ஜூடோ போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற மேற்படி அரசு பள்ளி மாணவன் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்துப் பெற்றார்.

சர்வதேச அளவிலான போட்டியில் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பெருமையைத் தேடித் தரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்தினார்.

Conclusion:ஆறாவது தேசிய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவன்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.