ETV Bharat / state

பிறந்து இரு நாள்களே ஆன பெண் குழந்தை சந்தேக மரணம்; பெற்றோர் மீது வழக்குப்பதிவு - girl baby mysterious death at aarani

திருவண்ணாமலை: ஆரணி அருகே பிறந்து இரண்டு நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்திருப்பது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

corona
corona
author img

By

Published : May 23, 2020, 9:32 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தவமூர்த்தி - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஜோதிலட்சுமி என்கின்ற ஒரு பெண் குழந்தையும், நான்கு வயதில் சந்தோஷ் என்கின்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இந்தத் தம்பதியினருக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்தப் பெண் குழந்தை பிறந்த மறுநாள் 21ஆம் தேதி உடல் நிலை சரியில்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர், உடலை இரும்புலி இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மறுநாள் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அக்ஸிதா, பெண் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மீது கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கண்ணமங்கலம் காவல் துறையினரின் முன்னிலையில், குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, போளூர் வட்டாட்சியர் பாலாஜி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவர் கமலகண்ணன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர்.

இதனை வீடியோ மூலம் முழுமையாகப் பதிவு செய்து, உடற்கூறாய்வு முடிவை ஒரு வாரத்திற்குள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, குழந்தையின் பெற்றோர் கூறுகையில், குழந்தை இறப்பிற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இதற்கு மருத்துவர்கள் தான் காரணம் எனவும் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் தரப்போ, தவமூர்த்தி - பிரியா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருப்பதால் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்து இதுபோன்று இறந்து இருப்பது அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.