ஜெர்மனியைச் சேர்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், "ஜெர்மனியைச் சேர்ந்த ஜார்ஜ், கோட்டூர்லா உள்ளிட்ட நான்கு பேர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு வந்து பல ஆன்மிக இடங்களுக்குச் சென்று விட்டு இறுதியாக திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திற்கு வந்துள்ளோம்.
தற்போது கரோனா பாதிப்புக்களால் தாங்களால் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. இதனிடையே, நாங்கள் ஜெர்மனி தூதரகத்தின் மூலம் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்ல முறையிட்டுள்ளோம்.
ஜெர்மனி அரசு தங்களை அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களை சென்னைக்கு அழைத்துச் சென்றால் அனைவரும் ஜெர்மனி தூதரகத்தின் மூலம் ஜெர்மன் செல்ல ஏதுவாக இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பெற்றுகொண்டார்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க:தமிழர் கலாசாரத்தை அறிய ஜெர்மானிய மாணவர்கள் தமிழகம் வருகை!