திருவண்ணாமலை நகரின் கிரிவலப் பாதையில் 200-க்கும் மேற்பட்ட சாதுக்கள் வசித்துவருகின்றனர். தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிரிவலப்பாதை முழுவதும் தங்கியிருக்கும் 200-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமிகள் ஆஸ்ரமம் சார்பில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கிவருகிறது.
காலையில் இட்லி, பொங்கல், சாம்பார், டீ - மதியம் சாதம் சாம்பார் - இரவு கிச்சடி ஆகிய உணவு வகைகளை மூன்று வேளையும் சுகாதாரமான முறையில் சமைத்து, சூடாக அனைத்து சாதுக்களுக்கும் அவர்கள் இருக்கும் இடங்களுக்குத் தேடி வாகனத்தில் எடுத்துச் சென்று வழங்கப்பட்டுவருகிறது.
உணவு வாங்கி சாப்பிடும் சாதுக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று உணவை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: 4,500 ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வல இளைஞர்கள்