ETV Bharat / state

கிராமிய இசைக்கலைஞர்களுக்கு இலவச பாஸ் வழங்கக் கோரிக்கை! - folk artist meeting in thiruvannamalai

திருவண்ணாமலை: கிராமிய இசைக்கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரயில் பாஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்று திருவண்ணாமைலை மாவட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறேவேற்றியுள்ளது.

folk music artist meeting in thiruvannamalai
author img

By

Published : Nov 25, 2019, 7:57 PM IST

திருவண்ணாமலை மாவட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலுமிருந்து கிராமிய இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் குறிப்பாக திருமண விழாக்களில் டி.ஜே., என்னும் மேற்கத்திய இசையை அனுமதிக்கக்கூடாது, கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும், கிராமிய இசைக்கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரயில் பாஸ் , மாத ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு போன்றவை வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு இலவச காங்கீரிட் வீடு, அரசு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

music artists tiruvannamalai  கிராமிய இசை நிகழ்ச்சி  திருவண்ணாமலை கிராமிய இசைக்கலைஞர்கள் ஆலோசனைக்கூட்டம்  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்  thiruvannamalai district news
ஆலோசனைக்கூட்டத்தில் பங்குபெற்ற கிராமிய இசைக்கலைஞர்கள்

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர்கள், தீபத்திருவிழா முடிந்த பிறகு தமிழ்நாடு அரசு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுமக்களுக்கு கிராமிய இசை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடம் அனுமதி பெற்று கவன ஈர்ப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முறையான ஊதியம் வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

Intro:திருவண்ணாமலை மாவட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது. Body:திருவண்ணாமலை மாவட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இருக்கின்ற இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருமண மண்டபங்களில்
டி ஜே என்னும் மேற்கத்திய இசையை அனுமதிக்கக்கூடாது, கோவில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் , பஸ் பாஸ் மற்றும் ரயில் பாஸ் , மாத ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு இலவச காங்கிரட் வீடு, அரசு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

தீபத் திருவிழா முடிந்த பிறகு தமிழக அரசுக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடம் அனுமதி பெற்று கவனயீர்ப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்றும் இசைக்கலைஞர்கள் தெரிவித்தனர்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.