திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான இன்று விடியற்காலை 5:30 மேல் 7:05 மணிக்குள், விருச்சிக லக்னத்தில் 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
அப்போது, அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள, திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு திரளாகக் கலந்துகொண்டு கொடியேற்ற நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க:
திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!