ETV Bharat / state

மகா தீப மலையில் தீ வைப்பு: போராடி அனைத்த தீயணைப்பு துறை! - திருவண்ணாமலை மகா தீப மலைக்கு தீ வைப்பு: போராடி அனைத்த தீயணைப்பு துறை

திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் பின்புறமுள்ள மகா தீப மலையில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தீயனைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மலையில் ஏற்பட்ட தீ விபத்து
மலையில் ஏற்பட்ட தீ விபத்து
author img

By

Published : Apr 1, 2020, 7:10 AM IST

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் தினத்தன்று 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும், இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தீப தரிசனம் காணுவது வழக்கம். மேலும், இந்த மகாதீப மலையில் ஏற வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மகாதீபம் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மூலிகை மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தீயணப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், வனத் துறையினர், சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் மலைக்குச் சென்று தீ வைத்தது குறித்து காவல் துறையினர், வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையில் ஏற்பட்ட தீ விபத்து
லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதமாக வழிபடும் மலைமேல் தீ வைத்த சமூக விரோதிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் மலைமீதுள்ள அரியவகை மரம், செடி, கொடிகளை, பாதுகாப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மாங்காய் குடோனில் தீ விபத்து: ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.