ETV Bharat / state

பள்ளியில் தீ விபத்து; கம்ப்யூட்டர், புத்தகங்கள் எரிந்து நாசம்.. - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அடையாளம் தெரியாத மாணவர்கள் மின்சார ஒயர் எரித்ததில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வைத்திருந்த அறை எரிந்து, பொருட்கள் நாசமானது.

பள்ளியில் தீ விபத்து
பள்ளியில் தீ விபத்து
author img

By

Published : Nov 6, 2022, 9:04 AM IST

திருவண்ணாமலை: செங்கம் பேரூராட்சி பகுதியில் இயங்கிவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மழையின் காரணமாகப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தும், முறையான பாதுகாப்பு ஏற்படுத்தி பள்ளி பூட்டி வைக்கப்படாமல் இருந்தது. இதனால் அடையாளம் தெரியாத மாணவர்கள் வெளிப்பகுதியில் இருந்து மின்சார ஒயரை திருடி வந்து பள்ளியில் வைத்து எரித்து, விலைக்கு விற்றுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்குத் தேவையான காலணி, கம்ப்யூட்டர், டேபிள், சேர், புத்தகங்கள் போன்ற உபகரணங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ள அறையின் அருகாமையில் மின்சார ஒயர்களை எரிக்கப்பட்டதால், உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து வந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது சம்பந்தமாகச் செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பள்ளி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அரசுப் பள்ளிக்குச் சொந்தமான ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. எனவே பள்ளிக்கு முறையான பாதுகாப்பு ஏற்படுத்தி விடுமுறை நாட்களில் பள்ளியைப் பூட்டி வைக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: எடப்பாடியுடன் இருக்கும் சிலர் கூடிய விரைவில் பாஜகவில் சேர உள்ளனர் - புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.