ETV Bharat / state

அரசு அலுவலகத்தில் வெடித்து சிதறிய டைல்ஸ்.. நில அதிர்வா என்ற பீதியில் ஊழியர்கள் ஓட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலகத்திற்குள் திடீரென அதிக சத்தத்துடன் தரையில் பதித்திருந்த டைல்ஸ் கற்கள் வெடித்ததால் நில அதிர்வு ஏற்பட்டதோ என அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் பீதியாகினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 23, 2023, 9:01 AM IST

வெடித்து சிதறிய டைல்ஸ்கள்..நில அதிர்வா என பொதுமக்கள் பீதி

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிக சத்தத்துடன் டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்து பெயர்ந்ததால் நில அதிர்வு ஏற்பட்டதோ என்ற அச்சத்துடன் உள்ளிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் நேற்று (பிப்.22) மாலை அதிக சத்தத்துடன் டைல்ஸ்கள் பெயர்ந்தன. திடீரென டைல்ஸ்கள் பெயர்ந்ததால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர அவசரமாக கட்டடத்தை விட்டு வெளியேறினார்.

கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலகம் முதல் தளத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், கூட்டரங்கு உள்ளிட்டவை உள்ளன. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் கூட்ட அரங்கில் ஏதோ வெடித்தது போன்று அதிகளவு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்களும் பொதுமக்களும் அச்சத்துடன் தாலுகா அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர்.

இதற்கு நிலநடுக்கம் காரணமா? என்ற அச்சத்தில் இருந்த ஊழியர்களும் பொதுமக்களும் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என தெரிந்த பின்னர் முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது கூட்டரங்கில் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தாசில்தார் சப்ஜான் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற போது, தான் இங்கு இல்லை எனவும் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடைபெற்ற போது கூட்டரங்கில் யாரும் இல்லாததால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் டைல்ஸ் அதிக அளவு சத்தத்துடன் பெயர்ந்தது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் நில அதிர்வா? குலுங்கிய கட்டடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.