திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த முளகிரிப்பட்டு கிராமத்தில் எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவைக் கண்டித்து 8 வழி சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் கறுப்புக்கொடி ஏந்தி, சுந்தரி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் முளைகிரிபட்டு வயல்வெளியில் இறங்கிய அவர்கள், தேர்தலுக்கு முன்பாக எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் பேசிய திமுகவினர் தேர்தலில் வென்ற பிறகு, எட்டு வழிச் சாலை கொண்டு வருவது ஏன் எனக்கேள்வி எழுப்பிய அவர்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரைக் கண்டித்தும், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்து சென்னை-சேலம் 8 வழிச்சாலையைப் போடத் துடிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்தும், முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர், முளைகிரிபட்டு விவசாயிகள், உள்ளிட்டோர் பங்கேற்று எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:'அண்ணா நூலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை..!' - அரவிந்த் கெஜ்ரிவால்