தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் செப்டம்பர் 9ஆம் தேதி திருவண்ணாமலை வந்த போது 41 லட்சம் மனுக்கள் மட்டும்தான் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 26 லட்சம் மனுக்கள் ஏறக்குறைய 40 விழுக்காடு மக்களின் மனு பதிவாகாமல் உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்ததாகவும், கடந்த 2 ஆண்டு காலமாக 40% மனுக்கள் பதிவாகாமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
4 லட்சத்து 49 ஆயிரம் மனுக்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் மனுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
'தமிழ்நாடு விவசாயிகளின் காதில் அரசாங்கங்கள் பூ சுற்றுகிறது' என்பதை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தங்கள் காதுகளில் பூக்களை சுற்றிக்கொண்டு நூதன முறையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவுவாயில் முன்பாகப் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மீதமுள்ள 2 லட்சத்து 39 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யவில்லை என்று விவசாயி குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'இரண்டு ஆண்டு காலமாக 'கிசான் நிதி' என்பது பதிவு செய்யாதவர்களுக்கு 50 விழுக்காடு நபர்களுக்குப் போய் சேரவில்லை. ஆகவே, இந்த நிலை மாறிட தமிழ்நாடு அரசு கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம் நடத்திட வேண்டும். யூடிஆர் திருத்தப்பட வேண்டும். ஆதார் எண் திருத்தம் - பெயர் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
கூட்டு பட்டாக்களில் இருந்து தனிப்பட்டாவாக பிரித்து தரப்பட வேண்டும். இவை அனைத்தும் செய்யப்படாததால் தான் தமிழ்நாடு முழுவதும் 36 லட்சம் மனுக்கள் பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணம்.
இதனை மூடி மறைப்பதற்காகவே கிசான் திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக அனைத்துக் கட்சிகளும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. பல மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 50 விழுக்காடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டு காலமாக, மத்திய அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கிராமங்களில் பட்டா மாறுதல் செய்வதற்கான முகாம் அமைத்து விடுபட்ட 36 லட்சம் பயனாளிகளுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்திட வேண்டும்.
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்குவதைப் போல, தமிழ்நாடு அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் கிசான் திட்டம்: காதில் பூ சுற்றும் அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம் - பிரதமர் கிசான் திட்டம்
திருவண்ணாமலை: பிரதமர் கிசான் திட்டத்தில் தமிழ்நாடு அரசு விவசாயிகள் காதில் பூ சுற்றுவதாகக்கூறி, விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.