ETV Bharat / state

மேல்மா சிப்காட்டை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்! - farmer demanding the expansion of Melma Sipcot

Melma SIPCOT issue: செய்யாறு அடுத்த மேல்மா பகுதியில் சிப்காட் அமைக்க வலியுறுத்தி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Melma Sipcot Issue
மேல்மா சிப்காட் விரிவாக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 11:09 AM IST

மேல்மா சிப்காட்டை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த மேல்மா பகுதியில் சிப்காட் அலகு மூன்று விரிவாக்கத்தைத் தொடங்கிட வலியுறுத்தி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்மா கூட்டு சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, செய்யாறு சிப்காட் விரிவாக்கமாக அலகு மூன்று திட்டத்திற்கு மேல்மா, குறும்பூர், நர்மாப்பள்ளம், காட்டுகுடிசை உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த பகுதியில் 3 ஆயிரத்து 174 ஏக்கர் பரப்பளவு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு, அதில் தற்போது 1,200 ஏக்கர் நிலம் மட்டுமே நில எடுப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக நிலம் கையகப்படுத்துதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்தை கைவிடக்கோரி ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 125 நாட்களாக காத்திருப்பு சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் மூலமாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்து, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் மகளிர் அமைப்பினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்மா கூட்டுச்சாலை பகுதியில் சிப்காட் அமைக்க தமிழக அரசுக்கு ஆதரவாக 'நிலத்தை எடு வேலையைக் கொடு' என்று கோஷமிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அதே கோரிக்கையை முன்வைத்து செய்யார் தாலுகாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிப்காட் விரிவாக்கம் செய்யப்படும் ஒன்பது கிராமங்களின் வழியாக, சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மேல்மா பகுதியில் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் அம்மை அப்பர் உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: உத்தரகாசி சுரங்க விபத்து; மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.