ETV Bharat / state

கடனுக்கு லஞ்சம், விவசாயிகளிடம் ஆபாச பேச்சு, போதையில் தள்ளாடும் வங்கி அலுவலர் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - Periyakolapadi Cooperative Bank

திருவண்ணாமலை: போதையில் தள்ளாடும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர், பதவி விலகக்கோரி விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Cooperative Bank officer
Cooperative Bank officer
author img

By

Published : Jul 18, 2020, 8:43 AM IST

திருவண்ணாமலை அடுத்த பெரியகோளாப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் அய்யனார், மது அருந்திவிட்டு விவசாயிகளிடம் தகாத வார்த்தையில் பேசுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் மதுபோதையில் வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் போடப்பட்டுள்ளன. வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டட வளாகம் மதுப் பிரியர்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கூட்டுறவு வங்கியின் தலைவர் அய்யனார், விவசாயிகளிடம் கடன் கணக்கு புதுபிக்கும்போது கூடுதலாக பணம் கேட்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் உள்ளன. கடன் வழங்க குழு ஒன்றுக்கு ஐந்தாயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெரியகோளாப்பாடி கூட்டுறவு கடன் சங்கம்
பெரியகோளாப்பாடி கூட்டுறவு கடன் சங்கம்

இதனிடையே, விவசாயி பெரியசாமி என்பவரை அய்யனார் தகாத வார்த்தைகளால் திட்டியதால், பெரியசாமி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வேளாண் கடன் கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யனார் பதவியிலிருந்து விலகக்கோரி விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:பணத்தைத் திருப்பித் தராத அரசு வங்கி: ஊழியர்களின் அலட்சியத்தால் கதறி அழுத மூதாட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.