திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் உயர்ந்து காணப்படுகிறது.
![இடைவிடாத தொடர் மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-07-morning-rain-vis-7203277_29042020131603_2904f_1588146363_1025.png)
இந்த மழையானது காலை ஆறு மணி முதல் தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கத்தில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்து வரும் கனமழையால் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பொது மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது என்றே கூறலாம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - ஸ்டாலின் கண்டனம்!