ETV Bharat / state

ஆரணி தடுப்பூசி முகாமில் முன்னாள் அமைச்சர் ஆய்வு! - corona vaccine

ஆரணியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆரணி தடுப்பூசி முகாமில் முன்னாள் அமைச்சர் ஆய்வு

author img

By

Published : Jun 16, 2021, 8:03 PM IST

திருவண்ணாமலை: ஆரணி டவுன் கோட்டை பகுதியில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள், 44 வயது மேற்பட்டடோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) இந்த முகாமினை முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி போடும் பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் சேர்மன் பாரி, பாபு, அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.