ETV Bharat / state

தமிழக முதல்வர் ஒரு வள்ளலார் - அமைச்சர் எ.வ.வேலு

E.V.Velu: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி, ஆளும் கட்சி என்று வேறுபடுத்தி பார்க்காமல், பகைவர்களுக்கும் அருளுகின்ற பண்பாடு எப்படி வள்ளலாருக்கு இருந்ததோ, அந்த எண்ணத்தோடு வள்ளலாராக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் பகைவர்களுக்கும் அருளுகின்ற வள்ளலாராக செயல்படுகிறார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 7:56 AM IST

தமிழக முதல்வர் பகைவர்களுக்கும் அருளுகின்ற வள்ளலாராக செயல்படுகிறார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சியில் அரசு மூலம் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் 377 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி, ஆளும் கட்சி என்று வேறுபடுத்தி பார்க்காமல், பகைவர்களுக்கும் அருளுகின்ற பண்பாடு எப்படி வள்ளலாருக்கு இருந்ததோ, அந்த எண்ணத்தோடு வள்ளலாராக தமிழ்நாடு முழுவதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொகுதி மற்றும் ஊராட்சிகளில் கூட வளர்ச்சிப் பணிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்படுகின்ற இந்த அரசில் செய்ய வேண்டிய பணிகளை, அமைச்சர்களாகிய நாங்கள் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதன் மூலமாக பல திட்டங்கள் இந்த ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என கூறினார்.

தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை அளித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் பகிர்ந்து பார்ப்பதில்லை எனவும், அனைவரும் நம்முடையவர்கள்தான் என்ற அடிப்படையில் வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம், 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் என இத்தகைய திட்டங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருவதாகவும், அதுதான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.