ETV Bharat / state

யானை தாக்கியதில் வீடுகள் சேதம்... எம்.எல்.ஏ. ஆறுதல் - Elephant attack in Thiruvannamalai

திருவண்ணாமலை: காட்டு யானை தாக்கியதில் சேதமடைந்த 5 குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கும் காட்சி

author img

By

Published : Apr 28, 2020, 1:24 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளில் ஒற்றை ஆண் யானை பல ஆண்டுகளாக சுற்றித்திரிகிறத. இந்நிலையில் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள இந்த ஓற்றை யானை தாக்குதலினால் மாட்டுக்கானூர், நஞ்சான்கொல்லை, பெருங்கட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வீடுகளும், நிலங்களும் சேதமடைந்துள்ளன.

யானை தாக்கியதில் விவசாயிகளின் வீடுகள் சேதம்

இதில் மாட்டுக்கானூர் பகுதியைச் சோந்த குப்புராஜ், மல்லிகா, சுசீலா நஞ்சான்கொல்லை கிராமத்தினைச் சேர்ந்த சின்னபையன் மற்றும் பலராமன் ஆகியோரின் விவசாய நிலம், வீடுகள் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக அளித்து, அவர்களின் வீடுகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கோவிட்-19 மீட்சி: ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் வீடு திரும்பினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.