ETV Bharat / state

இந்திக்கோ, இந்துவுக்கோ விரோதி திமுக அல்ல!

திருவண்ணாமலை: அமையப்போகும் திமுக அரசு யாருடைய நம்பிக்கைக்கும் எதிராக இருக்காது என்றும், அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Mar 25, 2021, 7:36 PM IST

Updated : Mar 25, 2021, 7:42 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “திமுக இந்து விரோதி என்ற ஒரு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். யாருடைய நம்பிக்கைக்கு எதிராகவும் திமுக இருப்பதில்லை. அமையப்போகும் திமுக அரசு அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும். இந்தி மொழிக்கும் திமுக என்றும் விரோதியாக இருந்ததில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

இந்திக்கோ, இந்துவுக்கோ விரோதி திமுக அல்ல!

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டி பார்க்கிறது' : வைகோ கண்டனம்

Last Updated : Mar 25, 2021, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.