ETV Bharat / state

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி செய்த திமுக முன்னாள் அமைச்சர்! - Thiruvannamalai district news

திருவண்ணாமலை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர்
திமுக முன்னாள் அமைச்சர்
author img

By

Published : May 11, 2020, 8:04 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், அதைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம் ஏழை எளிய மக்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் வருமானமின்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அந்தவகையில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தங்களுக்கும், தங்களது குடும்பதினருக்கும் உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் வறுமையில் சிக்கி வந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். மேலும் 144 தடை உத்தரவு முடியும் வரை, ஏழை எளிய மக்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்ய திமுக தயாராக உள்ளது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.