ETV Bharat / state

கடைக்கு சீல் : அதிரடி காட்டும் திருவண்ணாமலை நிர்வாகம்! - திருவண்ணாமலை தபோதைய செய்திகள்

திருவண்ணாமலை : தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் குளிர்பான கடைக்குள் வாடிக்கையாளர்களை அமரவைத்து குளிர்பானம் விற்பனை செய்த கடைக்கு மாவட்ட நிர்வாக அலுவலர்கள் சீல் வைத்தனர்.

கடைக்கு சீல் : அதிரடி காட்டும் திருவண்ணாமலை நிர்வாகம்

author img

By

Published : May 6, 2020, 1:50 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டும், 33 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரமடைந்து வருகிற கோவிட்-19 தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது.

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருள்கள் விற்பனை உள்ளிட்ட கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விற்பனை செய்த பொருள்களை கடைகளில் உட்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடைக்கு சீல் : அதிரடி காட்டும் திருவண்ணாமலை நிர்வாகம்
கடைக்கு சீல் : அதிரடி காட்டும் திருவண்ணாமலை நிர்வாகம்

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை கருத்தில் கொள்ளாமல் நகரின் சின்னக்கடை தெருவில் உள்ள குளிர்பானக் கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை கடைக்குள்ளேயே அமர வைத்து குளிர் பானங்களை பருக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் விரைந்து வந்து குளிர்பான கடையைப் பூட்டி, சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

நகர் பகுதியில் இயங்கிவரும் குளிர்பான கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.