ETV Bharat / state

திருவண்ணாமலை சென்னியம்மன் ஆலயத்தில் வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்! - திருவண்ணாமலை

சென்னியம்மன் ஆலயத்தில் சென்று வழிபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னியம்மன் ஆலயத்தில் வழிபட முடியமால் - பக்தர்கள் ஏமாற்றம்..!

author img

By

Published : Aug 3, 2022, 8:04 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்தும் கிடாவெட்டியும்; தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருவது வழக்கம்.

சென்னியம்மன் ஆலயத்தில் வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்..!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவின்போது தங்களது நேர்த்திக்கடனை செலுத்த சுற்றுவட்டாரப்பகுதி பக்தர்கள் தயாரான நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஆற்றில் இறங்கி புனித நீராடுவதற்கும் பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள பாறை சென்னியம்மன் ஆலயத்தில் சென்று வழிபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்த திரளான பக்தர்கள் பாறை சென்னியம்மனை தரிசனம் செய்ய முடியாமல் கரையோரத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீ வெங்கட ரமண சுவாமியை மட்டும் தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:Exclusive from Birmingham: "சொல்ல வார்த்தையே இல்லை" - தங்கம் வென்ற பின் தமிழ்நாடு வீரர் உவகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.