தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன் படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மருந்தகங்கள் உள்ளிட்டவைதான் திறந்திருக்கின்றன.
அதுபோல இன்று அண்ணாமலையார் கோயிலில் திருமணத்திற்கு முன் பதிவு செய்திருந்தோரின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பத்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பின் திருமண நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் கோயில் மூடப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுப்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.