திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த வெளுங்கனந்தல் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் தர்பூசணி 30 ஆண்டுகளாகப் பயிரிட்டுவருகின்றனர்.
ஆண்டுதோறும் கோடை வெயில் தொடங்கிய நிலையில் ஏப்ரல், மே மாதம் விற்பனை அதிகரிக்கும் என்பதால், அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறும்.
இந்நிலையில், இந்தாண்டு அறுவடை பணியின்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் விவசாயிகள் தர்பூசணியை அறுவடை செய்யாததால், அது நிலத்திலேயே அழுகிய நிலையில் காணப்படுகிறது.
ஆண்டுதோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவந்த தர்பூசணி தற்போது, 144 தடை உத்தரவால் வாகனங்கள் இயக்கத் தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடைசெய்யப்படாமல் நிலத்தில் உள்ளது.
எனவே, அரசு விற்பனைக்கு அனுமதிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசால் முடிந்த இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விலகி இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்