திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது எனவும், விவசாயிகள் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும்,100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரியும், கரோனா கால நிவாரணமாக பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 வீதம் ஏழு மாதங்களுக்கு வழங்கக் கோரியும், தொழிலாளர்கள் நலனை அரசு காத்திட கோரியும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதில் நகர செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் மகளிரணி சாந்தி, பொன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சொந்த தந்தையையே ஏமாற்றிய ஒற்றாடல் பட இயக்குநர்: வாடகை வீட்டில் வசிக்கும் தந்தை