ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 55 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று( ஜூலை 8) ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
author img

By

Published : Jul 8, 2020, 10:35 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று( ஜூலை 7) வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633 ஆக இருந்தது. இன்று புதிதாக 55 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ( ஜூலை 7) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1107 ஆக உள்ளது, சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயாளியுடன் தொடர்பில் இருந்த 26 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 14 பேர், முன் களப்பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 14 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு இன்று (ஜூலை 8) நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.