கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக மஞ்சள், வேப்ப இலைகளை அரைத்து தங்களது கிராமம் முழுவதிலும், வீடுகளிலும் தெளித்து நோய்த்தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று மனிதனின் நுரையீரலை தாக்கிய பின் படிப்படியாக உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் சித்த மருத்துவத்தில் உள்ள கபசுர பொடியினை வாங்கி தண்ணீரில் முழுமையாக கொதிக்கவைத்து பின்னர் வடிகட்டி அருந்தினால் நுரையீரல் பிரச்னைக்கு முழுமையான தீர்வு ஏற்படுவதாக தகவல் பரவியது.
இதையடுத்து இன்று திருவண்ணாமலையில் உள்ள ஆயுர்வேத கடைகளில் கபசுர குடிநீரை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அவர்கள் இடைவெளிவிட்டு வரிசையில் நின்றனர். வியாபாரிகள் இதனை 148 ரூபாய்க்கு மக்களுக்கு விற்பனை செய்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: இறைச்சிக் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல்