திருவண்ணாமலை அடுத்த மங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண், ஆண் காவலர்களுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காட்டுத்தீ போல், பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் முக்கியப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காவல் துறையினர் முக்கியமான இடங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தை இரவு, பகல் பாராமல் கண்காணித்து போக்குவரத்தை வரைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில காவல் துறை அதிகாரிகள், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனைத்தடுக்கும் பொருட்டு திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்களுக்கு, மங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனைகள், மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கறை நீக்கும் சலவைத் தொழிலாளர்களின் வாழ்வை கறையாக்கிய கரோனா!