நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல், அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மேலும் சில நாள்கள் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய மருத்துவர்களே ஊரடங்கை மதிக்காமல் அலட்சியத்தோடு நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் படித்துவரும் மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்றுகூடி கடைப்பிடிக்காமல் கிரிக்கெட் விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கிரிக்கெட் விளையாடிய இடத்தின் அருகேதான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கக் கூடிய மருத்துவர்களே 144 தடை உத்தரவை மதிக்காமல் கிரிக்கெட் விளையாடினால், பொதுமக்கள் இதனை எவ்வாறு கடைப்பிடிப்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ராட்சத இயந்திரம் சேலத்தில் அறிமுக
ம்