திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.12) ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 279ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையிலிருந்து வந்த 5 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 52 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 28 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 23 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 18 பேர் உள்ளிட்ட 126 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்று வரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,090 ஆகவும், இதுவரை சிகிச்சை பலனின்றி உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆகவும் உள்ளது.